அகோனி போரா அரிசி! இதை அடுப்பே இல்லாமல் சமைக்கலாம்!
அசாமில் விளையும், அகோனி போரா அரிசி இருந்தால், சமைக்க கேஸ் அடுப்பு, குக்கர் மற்றும் அதற்கான நேரமும் தேவை இல்லை
புழுங்கல் அரிசி வகையை சேர்ந்த இது, குறைந்த அமிலோஸ் உள்ளடக்கத்தை அதாவது, 4.5 சதவீதம் கொண்டது.
மற்ற அரிசி வகைகளில், 20 - 25 சதவீதம் அமிலோஸ் உள்ளது. இது, தானியங்களின் கடினத் தன்மைக்கு காரணமாகிறது.
இந்த அரிசியில், மிகக்குறைந்த அமிலோஸ் இருப்பதால், கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
குளிர்ந்த நீராக இருந்தால், இந்த அரிசியை, 45 நிமிடங்கள் ஊற வைக்கவும். சுடு தண்ணீராக இருந்தால், 15 அல்லது 20 நிமிடங்கள் ஊற வைத்து, இலை போட்டு பரிமாறி விடலாம்.
மேற்கு அசாம் பகுதிகளில் அதிகளவில் விளைகிறது. சில மாதங்களில் விளையக் கூடியது. குட்டையாக வளருவதால், இதன் வைக்கோல் உற்பத்தி குறைவாக இருக்கும்.
அகோனி போரா அரிசி எளிதில் ஜீரணிக்கக் கூடியது. மேலும் அதிக புரத சத்துக்கள் நிறைந்தது.