கேரளா ஸ்டைல் மீன் மொய்லி ரெசிபி இதோ!

மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. கேரளாவில் மிகவும் பிரபலமான மீன் மொய்லியை எப்படி செய்வது என்பதை அறிந்து கொள்வோம்.

இதெல்லாம் தேவை : மீன் -1/2 கிலோ, நீளமாக நறுக்கிய வெங்காயம் -1, இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் -10, நீளமாக நறுக்கிய தக்காளி -1

தேங்காய் -1/2 மூடி(துருவியது), கார்ன் மாவு -1/2 டீஸ்பூன், மிளகு தூள், கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப

துருவிய தேங்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து அதிலிருந்து தேங்காய்பால் எடுத்து வைக்க வேண்டும்.

மீனை நன்கு கழுவி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்கவும். இதை உடையாமல் ஜாக்கிரதையாக வறுக்க வேண்டும்.

ஒரு வாணலி அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதிக்க விட வேண்டும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்த மீன் துண்டுகளை சேர்த்து பின் தேங்காய்ப்பாலையும் சேர்த்து, 10 நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

நிறைவாக மிளகு தூள் பின் கொத்தமல்லியை அதில் தூவி, அடுப்பை அணைக்கவும். சுவையான கேரளா ஸ்டைல் மீன் மொய்லி ரெடி.