நவராத்திரி ஸ்பெஷல்... தினை சர்க்கரைப் பொங்கல்!
தேவையான பொருட்கள்: தினை - 1 கப், பயத்தம் பருப்பு - கால் கப், வெல்லம் - கால் கப்,
நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் துாள் - தேவையான அளவு.
தினையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, நான்கரை மடங்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி போட்டு, அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக விடவும்.
பயத்தம் பருப்பை நன்றாக வேக வைக்கவும். இதை அப்படியே தண்ணீருடன், வெந்த தினையில் சேர்க்கவும்.
சம அளவு வெல்லத் துருவலுடன் சிறிது தண்ணீர் விட்டு, இளம் கம்பி பதத்தில் பாகு காய்ச்சி வடிகட்டிச் சேர்க்கவும்.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து, ஏலக்காய்த்துாளுடன் பொங்கலில் சேர்க்கவும். மேலாக, சிறிதளவு நெய் விட்டு இறக்கவும்.
இப்போது நவராத்திரி கொலுவின் போது படைக்க சுவையான மற்றும் ஹெல்த்தியான தினை சர்க்கரைப் பொங்கல் ரெடி.