ஹெல்த்தியான பப்பாளி சாலட்
தேவையானப் பொருட்கள்: பழுக்காத பப்பாளி - 1, மாதுளம்பழம் - 1, எலுமிச்சை - 1/2, கருப்பு மற்றும் வெள்ளை எள் - தலா 1 டீஸ்பூன், கொத்தமல்லி இலை -சிறிதளவு
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், இடித்த சிவப்பு மிளகாய் - 1/2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
பப்பாளியை தோலை சீவிவிட்டு, காய்கறி துருவலில் நீளவாக்கில் துருவிக் கொள்ள வேண்டும். அதனுடன் உரித்த மாதுளைப்பழத்தை சேர்க்கவும்.
பின் நறுக்கிய கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு, சிறிதாக நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் உலர்ந்த மாங்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
நறுக்கிய பூண்டு, எள் மற்றும் இடித்த சிவப்பு மிளகாயை ஒரு கிண்ணத்தில் கலக்கிக் கொள்ளவும். அதில் சூடான நல்லெண்ணெய் சேர்க்கவும்.
இதை பப்பாளி கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கி, நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பப்பாளி சாலட் ரெடி.