குட்டீஸை கவரும் சிறுதானிய மோமோஸ்! ரெசிபி இதோ!
திபெத், நேபாளத்தின் பாரம்பரிய உணவுமுறைகளில் ஒன்று மோமோஸ். இன்று குழந்தைகளின் விருப்ப உணவாக மாறிவிட்டது. அதில் சிறுதானிய மோமோஸ் குறித்து செய்முறை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: சிறுதானிய மாவு - 400 கிராம், கோதுமை மாவு - 100 கிராம், நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் - 400 கிராம்
பெரிய வெங்காயம் - 1, இஞ்சி - 1 துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு, துருவிய சீஸ் - 4 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சிறுதானிய மாவை கோதுமை மாவுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
நறுக்கி வைத்திருந்த பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், 1 ஸ்பூன் அளவு இஞ்சி, கொத்தமல்லி, உப்புடன் சேர்த்து கலந்து தனியே வைக்க வேண்டும்.
பின் துருவிய சீஸ் அதில் சேர்த்தால் மோமோஸ் உள்பகுதியில் சேர்ப்பதற்கான 'ஸ்டப்பிங்' ரெடியாகி விடும்.
பின் ஏற்கனவே 30 நிமிடம் ஊற வைத்த மாவை சம அளவிலான உருண்டைகளாகப் பிரிக்கவும்.
மோமோஸின் எல்லா பக்கங்களிலிருந்தும் மடிப்புகளை உருவாக்கவும். நடுவில் காய்கறி 'ஸ்டப்பிங்' வைத்து மாவை மையத்தில் மூடி, அதிகப்படியான மாவை கிள்ளவும்.
அனைத்து மோமோக்களையும் ஒரு ஸ்டீமரில் வைத்து, மோமோஸை 15 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும். மைதா சேர்க்காத சுவையான சிறுதானிய மொமோஸ் ரெடி..!