ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் சீத்தாப்பழம்
மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம், புரதம்,
கொழுப்பு, தாது உப்புகள், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உட்பட பல்வேறு
ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன.
சீத்தாப்பழம் சாப்பிட்டால் உடல் வலிமையாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதிலுள்ள
தாமிர சத்து, குடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. காலையில், வெறும் வயிற்றில்
தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டு வர, அமிலத் தன்மையை சரி செய்யும்.
வயிற்றில் புண்கள் வராமல் தடுக்கும்.
எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு துணை புரியும். நினைவாற்றல் திறன் அதிகரிக்கும்.
சீத்தாப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.
உடலுக்கு
குளிர்ச்சியை தரும். இதிலுள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்க
வைக்கும். பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்பு செயல்களில், இதன்
பங்கு அதிகம்.
இதய நோய் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
இதிலுள்ள வைட்டமின், 'ஏ' சத்து, கண் பார்வைக்கும், கூந்தல் வளர்ச்சியை துாண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.