மழைக்காலத்தில் காளான் சாப்பிடலாமா?

100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.

அதேபோல் 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து, 447 மி.கி. உள்ளது. சோடியம், 9 மி.கி., உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

காளானில் செரிமானத்தை அதிகப்படுத்தும் அமிலங்கள் அதிகமுள்ளன. இதனால், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் நல்லது.

இது எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. அதனால் மலச்சிக்கலைத் தீர்க்கும். மேலும் வயிறு மற்றும் ஆசனப்புண்களை குணமாக்கும்.

காளான், ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

காளான் மண்ணில் வளரும் ஒருவகை தாவரம் என்பதால் மழைக்காலத்தில் இதை கவனமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் இவை மிகவும் ஈரமான மண்ணில் வளரும் மற்றும் அதில் நிறைய பாக்டீரியாக்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அதனால் சமைக்கும் முன் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீரில் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு கழுவ வேண்டும். ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்கலாம்.