தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்... தேங்காய், அரிசி பாயசம்!

ஒரு கைப்பிடி பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து களைந்து, ஒரு மூடி தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில், தேங்காய், அரிசி விழுதை சேர்த்து, சிறிது பாலுடன் தண்ணீரை கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இடையிடையே கிளறவும்.

அரிசி நன்றாக வெந்தவுடன் 200 கிராம் வெல்லத்தை பொடித்து சேர்க்கவும்.

வெல்லச் சுவையை விரும்பாதவர்கள் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி வேகாவிட்டால், கொஞ்சமாக பால் சேர்க்கலாம்.

கொதித்து வந்ததும், சிறிது ஏலக்காய் துாளுடன் முந்திரி (10), பொடியாக நறுக்கிய பலாச்சுளை (2) துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்த்து, இறக்கவும்.

பால், தேங்காய், வெல்லம், பலாச்சுளை சேர்த்த சுவையான இந்த பாயசம், தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும்.