பாரம்பரிய சுவையில் இனிப்பு வெல்ல பணியாரம்
தேவையானப் பொருட்கள்: இட்லி மாவு - ஒரு கப், நாட்டு வெல்லம் - அரை கப், தேங்காய்த்துருவல் - ஐந்து டீஸ்பூன்.
முந்திரி, பாதாம் பருப்பு - தலா 5, ஏலக்காய் துாள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையானளவு.
நாட்டு வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணிர் விட்டு அடுப்பில் மிதமான தணலில் வைத்து ஐந்து நிமிடம் காய்ச்சவும்.
பாகு பதம் தேவையில்லை; கட்டியில்லாமல் இருந்தால் போதுமானது என்பதால், கவனமாக வெல்லம் கரைந்தவுடன் இறக்கி விடவும்.
ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு பொடிப்பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாமை பொன்னிறமாக வறுக்கவும்.
பின், இட்லி மாவில் கரைத்த வெல்லப்பாகை ஊற்றி நன்றாக கலந்து தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.
அடுப்பில் பணியாரக் கல் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், மாவை ஊற்றி மிதமானத் தணலில் இருபக்கமும் நன்றாக வேகவிட்டு பொன்னிறமானவுடன் எடுக்கவும்.
இப்போது பாரம்பரிய சுவையில் இனிப்பு வெல்ல பணியாரம் ரெடி. சூடாக இருக்கும் போதே பரிமாறினால், குட்டீஸ்கள் ஆர்வமுடன் சாப்பிடுவர்.