உடல் எடையை குறைக்கணுமா? அப்போ டயட்டில் சோயா துண்டுகளை சேர்க்கலாமே!
சோயாபீன் எண்ணெயை பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் துணைப் பொருள் தான் சோயா சங்க்ஸ் எனும் சோயா துண்டுகள்.
எண்ணெயை பிரித்தெடுத்த பிறகு மீதமுள்ள மாவில் இருந்து இந்த சோயா துண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய் முழுமையாக அகற்றப்படுவதால், சோயா துண்டுகள் கொழுப்பு நீக்கப்பட்டு இருக்கும்.
இது மென்மையாக பஞ்சு போன்றும், நார்தன்மையுடனும் இருக்கும். இதனை வெஜ் பிரியாணி உள்ளிட்ட பல உணவு வகைகளுடன் சேர்க்கலாம்.
100 கிராம் சோயாவில் 345 கலோரி, 52 கிராம் புரதம், 13 கிராம் நார்ச்சத்து, கால்சியம் - 350 மி.கி, 0.5 கிராம் கொழுப்பு, 33 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், இரும்பு - 20 மி.கி ஊட்டச்சத்துகள் உள்ளன.
இதில், நார்ச்சத்து அதிகமுள்ளதால், நீண்ட நேரத்துக்கு பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. இது உங்கள் கலோரி அளவைக் குறைக்க உதவுவதால், உடல் எடை குறையும்.
நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குவதால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சோயா சங்க்ஸ் போன்ற அதிக புரதச்சத்துள்ள உணவுகளை உண்ணும் போது அதிக தெர்மிக் விளைவு ஏற்படும். அதாவது ஒரு நாளைக்கு அதிக கலோரிகள் எரிக்கப்படும்.
சோயாவில் புரதம் அதிகம் என்பதால் அதனை இஷ்டம் போல சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாவது போன்ற பிரச்னை ஏற்படும்.
ஒரு நாளில் 25 முதல் 30 கிராம் சோயா துண்டுகளை உட்கொள்ளலாம். சோயா சங்க்ஸ் கறியை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாதம் அல்லது ரொட்டியுடன் சேர்த்துக்கொள்ளலாம்.