இந்த மழை சீசனில் ஆரோக்கியத்தை காக்க உதவும் காய்கறிகள்!
தற்போது ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கும் நிலையில் உணவில் கவனம் செலுத்தாவிட்டால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்த சீசனில் கடை உணவுகளை தவிர்த்து வீட்டில் செய்த உணவை சாப்பிட முயற்சிக்கலாம். குறிப்பாக, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்க்கலாம்.
ஒரு சில காய்கறிகளை உட்கொள்ளும்போது, தொற்று, வயிற்று வலி போன்ற பாதிப்புகளை தவிர்க்க உதவுகிறது. எனவே, பருவமழை சீசனில் சாப்பிடக்கூடிய ஒருசில காய்கறிகள் இதோ...
வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பாகற்காய் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
தக்காளியிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுவதால், சாலட், சூப், ஜூஸ் என சாப்பிடலாம். இதிலுள்ள லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வெண்டைக்காய் ஆண்டு முழுவதும் கிடைத்தாலும், மழைக்காலங்களில் அதிகம் உட்கொள்ளலாம். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.
பூசணிக்காயை சாப்பிட மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பாதிப்புகளை தவிர்க்கலாம்.
பீட்ரூட் ஃபோலேட் நிறைந்த காய்கறியாகும். இதில் வைட்டமின்கள், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் இரும்புச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும், சுரைக்காய், கொத்து பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி, வெள்ளரிக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்க்கும்போது, நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துகிறது.