சம்மருக்கு ஏற்ற இளநீர், சப்ஜா விதை ஜூஸ்!
தேவையானவை: இளநீர் - ஒரு கப், இளநீர் வழுக்கை - இரண்டு தேக்கரண்டி
சப்ஜா விதை - ஒரு தேக்கரண்டி, தேன் - இரண்டு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: முதலில் சப்ஜா விதையை ஒரு பாத்திரத்தில் போட்டு, இளநீர் விட்டு மூடி வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து பார்த்தால், சப்ஜா விதை ஊறி, ஜவ்வரிசி போல வந்து விடும்.
இளநீர் வழுக்கையை கொஞ்சம் மிக்சியில் ஜூஸ் அரைத்தும், சிறிது அதை நறுக்கி எடுத்து வைக்கவும்.
பின் சப்ஜா விதையுடன் சேர்த்து தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், வெயிலுக்கு சூப்பராக இருக்கும்.