அகத்திக்கீரையும் அறியாத சில தகவல்களும்!!
அகம் + தீ + கீரை என்பதே அகத்திக்கீரையாகும். அதாவது, உடம்பிலுள்ள உஷ்ணத்தை தணிக்கும் தன்மை, இந்த கீரைக்கு இருப்பதால் தான், அகத்திக்கீரை என்று பெயர்.
வீக்கம், வாயு பிடிப்பு போன்றவைகளுக்கு அகத்திக் கீரையின் சாறு மருந்தாகிறது
கீரையை, தேங்காய் எண்ணெயில் வதக்கி, தேமல் உள்ள இடங்களில் பூசினால், தேமல் மறையும். சேற்று புண்களில் இந்த சாறு தடவினால், நிவாரணம் கிடைக்கும்.
கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை இந்த கீரை தீர்க்கிறது. மேலும், வாய்ப்புண், வயிற்று புண்களை ஆற்றுகிறது.
முருங்கைக்கீரை போலவே, இதுவும் இரும்புசத்து நிறைந்தது. எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தை தரக்கூடியது. 10 டம்ளர் பாலிலும், ஐந்து முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச்சத்து, ஒரு கட்டில் உள்ளது.
இந்த கீரை லேசாக கசப்பு, துவர்ப்புடன் இருப்பதால், முற்றிய கீரையை சமைக்காமல், இளம் கீரையை தேர்ந்தெடுத்து, தேங்காய்ப்பால் ஊற்றி சமைத்தால், கசப்பு தெரியாது.
கீரையில் வாயுத்தன்மை உள்ளதால், பெருங்காயத்தையும் கட்டாயம் சேர்க்க வேண்டும். மதிய நேரத்தில் மட்டுமே இந்த கீரையை சாப்பிட வேண்டும்.
அகத்திக் கீரை, மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது என்பதால், சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக் கூடாது. சிக்கனுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது.