வீசிங்கை கட்டுப்படுத்தும் முசுமுசுக்கை! பயன்கள் அறிவோமா...
சுக்கை என்கிற முசுமுசுக்கை மூலிகையை சித்தர்கள் இதனை ''ஆஞ்சநேயர் கை'' என்றழைத்தனர்.
இதன் இலை காசம், கோழை, சுவாசக் கோளாறுகள், புகைக்கம்மல், ஜலதோஷம் ஆகியவற்றை போக்கும் தன்மையுடையது. மேலும் வீசிங்கை கட்டுப்படுத்தும்.
இது செம்மண் பூமி மற்றும் கரும்புத் தோட்டங்களில் வளரும். பனிக் காலத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகளையும் நீக்கும் தன்மை உடையது.
வல்லாரை கீரையைப் போன்று ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்து மூளையை பலப்படுத்தும்.
இதன் இலையைப் பறித்து லேசாக இடித்து ரசம் வைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட பக்கவாதம், பித்த நோய்களைப் போக்கும்.
இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ரசப்பொடி போன்று பயன்படுத்தலாம். மேலும் புளி சேர்க்காமல் ரசம் வைப்பது மிகவும் சிறந்தது.
இதில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகள் பலம் பெறும்.
முசுமுசுக்கை செடியின் இலைகளை நன்றாக நீரில் அலசி, தோசை மாவுடன் சேர்த்து அரைத்து தோசை, அடையாக சுட்டு சாப்பிடலாம். ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்தது.