ஏலக்காயின் ஆரோக்கிய நன்மைகள்!
ஏலக்காய் செரிமானத்தைத் தூண்டும். வயிறு மற்றும் குடலிலுள்ள புண் மற்றும் வலியைப் போக்கும். வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், வீக்கம்
ஆகியவற்றைச் சரி செய்யும்.
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதில் அதிகமுள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும்.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலை ஆரோக்கியமாகவும், உள்ளுறுப்புகளைச் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும்.
சிறுநீரகத்தில் தேங்கும் கால்சியம் மற்றும் யூரியாவை வெளியேற்றுவதன் மூலம், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
ஏலக்காயின் முக்கிய கனிமமான பொட்டாசியம் ரத்தக் கட்டிகள், பக்கவாதம், ரத்தம் உறைதல் போன்றவற்றைத் தடுக்கும்.
மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கும் நிவாரணம் தரும். நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால், மூக்கடைப்பு நீங்கும்.
மன அழுத்த பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவர்.