கொழுப்பை அதிகரிக்காத முட்டை!
தினமும் முட்டை சாப்பிடுவதால், கொழுப்பு அதிகம் சேர்ந்து ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இதயக் கோளாறை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது.
ஆனால், தினம் ஒரு முட்டை அல்லது வாரத்திற்கு ஐந்து முட்டைகளை சாப்பிடலாம்.
இது, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுவதாக அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, தினமும் ஒன்று அல்லது இரண்டு அவித்த முட்டைகளை சாப்பிடுவதால், கொழுப்பு எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை.
ஒரு கிலோ உடல் எடைக்கு, 0.8 கிராம் - 1 கிராம் புரதம் தினமும் தேவைப்படுகிறது.
ஒரு முட்டையில், நுாண்ணுாட்டச் சத்துகளுடன் சேர்த்து, ஆறு கிராம் புரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.