ஆரோக்கியம் தரும் சுக்கு மல்லி காபி
சுக்கு மல்லி காபி குடித்தால் தலைவலி, தலைப்பாரம், சளித்தொல்லைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு மல்லி காபி என்று பலவாறாக அழைக்கப் படுகிறது.
டீ, காபியை தவிர்க்க விரும்புவோர், மாற்று பானமாக சுக்கு காபி பருகலாம்.
சுக்கு, சீரகம் ஆகிய பொருட்களை சம அளவும், கொத்தமல்லி இரு மடங்கும் எடுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
சுக்கு மல்லி காபி தயாரிக்க, 200மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும்.
செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா மற்றும் சோம்பல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.