ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கைக்கீரை பரோட்டா

தேவையானப் பொருட்கள்: முருங்கைக்கீரை : 1 கப், கோதுமை மாவு : 1 கப், குருமிளகு, தனியா, சீரகம் : தலா 1/2 டீஸ்பூன், ஓமம் : 1/4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் : 1.

இஞ்சி : சிறிதளவு, பச்சை மிளகாய் : 2, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உலர்ந்த மாங்காய் பொடி : தலா 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் : தேவையான அளவு.

முருங்கை கீரையிலுள்ள குச்சிகளை நீக்கி, இலைகளை தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை சிறிது சிறிதாக நறுக்கியும் கொள்ளலாம்.

கோதுமை மாவை தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். தனியா, குருமிளகு, ஓமம், சீரகத்தை கொரகொரப்பாக அரைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன், குருமிளகு, தனியா கலவையை சேர்த்து கிளறி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்க்கவும்.

பின், ம.தூள், சீரகத்தூள், மி.தூள், முருங்கைக்கீரை, உலர்ந்த மாங்காய் பொடி மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கழித்து வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவை உருண்டைகளாக்கி, தடிமனாக தேய்த்து, நடுவில் சிறிது முருங்கை இலை கலவையை வைத்து மீண்டும் உருட்டி பக்குவமாக தேய்க்கவும்.

பின்னர், தோசைக்கல்லில் சிறிது எண்ணெயை விட்டு பொன்னிறமாகும் வரை இருபக்கமும் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்தால் முருங்கை பரோட்டா ரெடி.

'சைடு டிஸ்' ஆக தயிர் மற்றும் வெங்காயம் கலந்த ரைத்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.