முள்ளங்கி ரசம் ரெசிபி இதோ

தேவையான பொருட்கள்: முள்ளங்கி - 50 கிராம், தக்காளி - 2, பூண்டு பல் - 2, காய்ந்த மிளகாய் - 3

மஞ்சள் துாள், சீரகம், உப்பு, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, எண்ணெய், கடுகு, பெருங்காயம், வெந்தயம், துவரம் பருப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

முள்ளங்கியை பொடியாக நறுக்கி நன்றாக வதக்கவும்.

ஆறியவுடன் துண்டாக நறுக்கிய தக்காளி, வறுத்த துவரம் பருப்பு, பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் துாள் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, பெருங்காயம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.

பின் புளி கரைசல் ஊற்றி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு போட்டு கொதிக்க விட்டு, நுரை வரும் போது இறக்கினால், முள்ளங்கி ரசம் ரெடி.