ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் வௌ்ளரிக்காய்

நீர் சத்துள்ள காய்கள் எல்லாமே உடல் நலத்துக்கு நன்மை தரும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை பல நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.

இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணம் உள்ளது. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

இதில், நீர்ச்சத்து அதிகமுள்ள நிலையில், புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பி மற்றும் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன.

காய்களில் குறைவான கலோரி அளவுள்ளது, வெள்ளரிக்காய் மட்டும்தான். 100 கிராம் வெள்ளரியில், 18 கலோரி மட்டுமே உள்ளது. குளிர்ச்சியானது.

இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடும்.

நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்; ஆற்றலையும் அதிகரிக்க செய்யும்.

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.