பாலை விட கால்சியம் அதிகமுள்ள உணவுகள் சில!
சீஸ்... அனைத்து வகையான சீஸிலும் கால்சியம் உள்ளது. இருப்பினும், சீடர் சீஸில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் சீடர் சீஸில் 721 மிகி கால்சியம் உள்ளது.
தயிர்... பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, வீட்டில் இயற்கையாக நொதிக்க வைக்கப்படும் தயிரை சாப்பிட கால்சியத்துடன், புரோபயோடிக்களும் கிடைக்கும்.
பீன்ஸ்... வைட்டமின் சி, நார்ச்சத்து மட்டுமின்றி, இதில், கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து வர கால்சியம் குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அத்திப்பழம்...எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் இதில் அதிகமாக உள்ளது.
சூரியகாந்தி விதைகள்... ஸ்நாக்ஸ் வேளைகளில் சாப்பிட ஏற்றது இது. ரத்த வெள்ளையணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பசலைக்கீரை... கால்சியத்தை தவிர, இதய ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டுக்கு தேவையான சத்துகள் இதில் அதிகமுள்ளன.
எள்... உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் எள்ளில் பாலை விட அதிகளவு கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் இதில் அதிகளவு உள்ளன.
டோஃபு... இதில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன்கள் அதிகம். கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.