பிரியாணி இலையின் ஆரோக்கிய நன்மைகள்

பிரிஞ்சி இலை எனும் பிரியாணி இலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி6, கால்சியம், இரும்பு, மாங்கனீஸ் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன.

இது செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகங்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

வாயு, வீக்கம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது.

ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதிலுள்ள ரூட்டின் (Rutin) மற்றும் கெஃபைக் (caffeic) அமிலம் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைக்கிறது.

இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

இதன் அழற்சி எதிப்பு பண்புகள் காயம், அதனை சுற்றியுள்ள வீக்கத்தை குறைக்கும்.