குட்டீஸ்கள் விரும்பும் கேழ்வரகு, சோளம் நுாடுல்ஸ்
தேவையானப் பொருட்கள்: கேழ்வரகு மாவு, சோள மாவு - தலா 1 கப், குடை மிளகாய், கேரட், பெரிய வெங்காயம் - தலா 1, முட்டைகோஸ் சிறிதளவு, பச்சை மிளகாய் - 1.
மிளகாய் பவுடர் - 0.5 டீஸ்பூன், பூண்டு - 4 பல், சர்க்கரை - 1 டீஸ்பூன், தக்காளி - 2, உப்பு, எண்ணெய், கொத்தமல்லி இலை - தேவையானளவு.
ஒரு பாத்திரத்தில் சோள மாவு, கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து, முறுக்கு அச்சில் பிழிந்து வேக வைத்து எடுத்தால் நுாடுல்ஸ் தயாராகிவிடும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கவும். பின், நீளவாக்கில் நறுக்கிய மு.கோஸ், கேரட், குடை மிளகாய் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்த தக்காளி, மிளகாய் பவுடர், கரம் மசாலா சேர்த்து வதக்கிய பின், 1 டீஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்த நுாடுல்ஸை சேர்க்கவும்.
ஓரு நிமிடத்துக்கு நன்றாக கிளறி கொத்தமல்லி இலையை துாவி இறக்கினால் சுவையான கேழ்வரகு, சோளம் நுாடுல்ஸ் ரெடி.
விருப்பப்பட்டால், சிறிதளவு சோயா சாஸ், சில்லி சாஸ், கொரகொரப்பாக இடித்த சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கலாம்.