இரவில் தூக்கமின்மையை போக்க உதவும் ஜாதிக்காய் பால்
இந்திய மற்றும் மேற்கத்திய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்று ஜாதிக்காய். அதேவேளையில் பாரம்பரிய மருத்துவத்தில் இதன் பங்கு இன்றியமையாதது.
இதில், மாங்கனீசு, தாமிரம், வைட்டமின்கள் பி6 மற்றும் சி, மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பவுடரை சேர்த்து குடிக்க தீர்வு கிடைக்கும்.
படுக்கைக்கு செல்லும் முன்பாக ஜாதிக்காய் கலந்த பாலை உட்கொள்வது அஜீரணம் அல்லது அசவுகரியத்தை போக்குவதுடன், அமைதியான தூக்கத்தை அளிக்கிறது.
இதிலுள்ள மாங்கனீசு எலும்பு ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்புகளை மேம்படுத்த உதவுகிறது.
தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு மெக்னீசியம் முக்கியமானது; மேலும், வைட்டமின் B6 மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இரவில் தூங்காமல் அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுடன் ஜாதிக்காயை ஒரே ஒரு முறை மட்டும் கல்லில் உரசி, நாக்கில் தடவ, அமைதியாக தூங்கக்கூடும்.