குழந்தைகளுக்கு பிடித்த தயிர் ஜெல்லி ஃப்ரூட் கேக்!

உங்களுக்கு பிடித்தமான பழங்களை சமமான துண்டுகளாக நறுக்கி, சிலவற்றை மற்றும் எடுத்து கேக் செய்யும் பாத்திரத்தில் அழகாக ஆங்காங்கே அடுக்கி வைத்துக்கொள்ளுகள்.

ஒரு பாத்திரத்தில் 100 கிராம் சர்க்கரை, 7 கிராம் அகர் அகர்,150 மி.லி., பால், 50 மி.லி., அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

பின்னர் இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கலக்கி கொதி வரும்போது அதில் 350 கிராம் தயிர் சேர்த்து 2 நிமிடம் கைவிடாமல் கலக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள பழங்களை சேர்த்துக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

இந்த கேக் கலவையை, ஏற்கனவே பழங்கள் அடுக்கி வைத்த பாத்திரத்தில் ஊற்றி 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டும்.

பின்னர் கேக்கை எடுத்து தட்டில் கவிழ்த்தினால், ருசியான தயிர் ஜெல்லி ஃப்ரூட் கேக் ரெடி.