சைவ உணவுக்கு மாற விரும்புபவர்கள் கவனிக்க வேண்டியவை..!
ஆரோக்கியம், மருத்துவ சிகிச்சை, உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காக சிலர் சைவத்துக்கு மாற விரும்புவார்கள்.
சைவ உணவுக்கு மாற விரும்பும் நபர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...
சைவ உணவு என்பது ஊட்டச்சத்து மாற்றத்தின் மிக அடிப்படையான நிலையாகும். இது உடலின் வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் ஆழமான மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் எனவும் கூறப்படுகிறது.
தாவர உணவுகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், எளிதில் ஜீரணிக்கக்கூடிய வடிவத்தில் ஒரு நபருக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சைவ உணவில் உள்ளன.
சைவ உணவிற்கு மாற விரும்பும் நபர்கள் படிப்படியாக சைவத்துக்கு மாறுவது சிறந்த வழியாகும். உடனடியாக அசைவத்தை ஒதுக்கிவிட முடியாது. அதனை செய்யவும் கூடாது.
சைவ உணவில் உடலுக்கு புரதங்கள் அதிகம் கிடைக்கும் உணவுகளான, பருப்பு வகைகள், தினை, கருப்பு பீன்ஸ், விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வது அவசியமாகும்.
நீங்கள், விருப்பமான ருசியான சைவ உணவுகளையும், விதம் விதமான சைவ உணவுகள், சைவ உணவகங்களை தேடித் தேடி சாப்பிடுங்கள் அதுவே உங்களை சைவ உணவுகளின் மீதான நாட்டத்தை அதிகரிக்கும்.
முன்பாக, ஊட்டச்சத்து நிபுணரை அணுகி தங்களது உடல் நிலையை கருத்தில் கொண்டு, சைவத்துக்கு மாறலாமா என்ற ஆலோசனைகளை பெறுவது அவசியம்.