செரிமான பிரச்னையா? ஒருவேளை பழங்கள் மட்டும் சாப்பிடுவது உதவுமா?
நமது உடலில் கண்ணுக்கு தெரியாமல் 'பயாலஜிக்கல்' கடிகாரம் இயங்குகிறது. பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்லும் போது அந்தந்த நேரத்தில் உணவு சாப்பிட்டு அந்த கடிகாரத்தை பழக்கி வருகிறோம்.
உதாரணமாக தினமும் காலை 8:00 மணிக்கு சாப்பிடுவீர்கள் என்றால் அந்த நேரத்தில் செரிமானத்திற்கான அமிலங்கள், ஹார்மோன்கள், சில திரவங்கள் எல்லாம் சுரந்து உணவுக்காக தயாராக இருக்கும்.
அப்போது சாப்பிட்டால் அந்த உணவு அமிலத்தின் காரத்தன்மையை சமன்படுத்தும். சாப்பிடவில்லை என்றால் அந்த அமிலம் எல்லாம் நீர்த்து போய் உடலுக்கு தொந்தரவு தரும்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் காலை, மதியம், இரவு உணவு சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படும். இதனால் அல்சர், செரிமான கோளாறு உருவாகும்.
உணவை அவசரமாக உண்பதும் வயிற்று பிரச்னைக்கு ஒரு காரணம். உணவை சரியாக மென்று சாப்பிடாமல் அவசரமாக உண்பதால் வாயிலுள்ள சுரப்பிகள் சுரந்து செரிமானத்திற்கு உதவ முடிவதில்லை.
5 முதல் 8 நிமிடங்களில் சாப்பிடுவதற்கு பதிலாக 13 நிமிடங்கள் வரை சாப்பிட்டு பழகுங்கள். உண்மையில் செரிமானம் வாயில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நொறுங்கத் தின்றால் நுாறு வயது வாழலாம்.
மூன்று நேரமும் நார்ச்சத்துள்ள, நீர்ச்சத்துள்ள உணவு, காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ள பழகுங்கள். தனியாக ஒருவேளையாக சாப்பிட வேண்டியதில்லை.