இது பச்சை பட்டாணி சீசன்! பயன்கள் அறிவோமா...

பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் கே, பொட்டாஷியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக உள்ளது. பீன்சுடன் ஒப்பிடும்போது, பட்டாணி குறைந்த கலோரி கொண்டது.

கண் கோளாறுகள், எலும்பு, பல் சம்பந்தமான நோய்களுக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், ரத்த விருத்திக்கும் பச்சை பட்டாணி நல்லது.

நம் உடலுக்கு தேவையான போலிக் அமிலம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் டி.என்.ஏ., கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பை, இதிலுள்ள விட்டமின் பி3 (நியாசின்) தடை செய்கிறது. இதிலுள்ள, ஆன்டிஆக்ஸிடென்டுகள், இதய ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நன்மை அளிக்கிறது.

பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாஷியம், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. மேலும்ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

குருமா, பிரைடு ரைஸ், நுாடுல்ஸ் என, பல்வேறு சுவையான உணவுகளை பச்சைப் பட்டாணி மூலம் சமைக்கலாம் என்பதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுகின்றனர்.