அத்திப்பழ பால் பாயசம் ரெசிபி

தேவையானப் பொருட்கள் : அத்திப்பழம் - 50 கிராம், பால் - 500 மி.லி.,

பேரீச்சை பழம் - 50 கிராம், உலர் திராட்சை - 50 கிராம், முந்திரி - 50 கிராம், நாட்டு சர்க்கரை - 400 கிராம், ஏலக்காய் துாள், பச்சைக்கற்பூரம், நெய், தண்ணீர் - தேவையான அளவு.

பாலுடன் நீர், நாட்டு சர்க்கரை சேர்த்து கொதித்ததும் அத்திப்பழம், பேரீச்சம்பழத்தை சிறிதாக நறுக்கி போடவும்.

பின், வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய்துாள், பச்சை கற்பூரம், நெய் சேர்த்து இறக்கவும்.

இப்போது சுவையான அத்திப்பழ பால் பாயசம் ரெடி.

ஆரோக்கிய சத்துகள் நிறைந்த இந்த பாயசத்தை உடல் நலத்துக்கு உகந்தது.