உடலுக்கு கால்சியம் சத்து தரும் உணவுகள் சில !
பாலில் கால்சியம் அதிகளவு உள்ளது. பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும், பாலிலுள்ள அளவு கால்சியம் உள்ளது.
மத்தி மீன் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.
பால் பொருட்களில் ஒன்றான சீஸில் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70- 80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது.
உலர் அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால், தினமும் 2 - 3 துண்டுகள் சாப்பிடலாம்.
பால் பொருட்களைத் தவிர, பச்சை இலைக் காய்கறிகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக, பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் உள்ளது.
இறாலில் கால்சியம் அதிகமுள்ளது. அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதிலுள்ள கால்சியம் போய்விடும். எனவே குறைந்த தணலில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.