மருந்துகளில் அமிர்தம் திரிபலா… பயன்கள் அறிவோமா…
நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா.
கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு என இந்த சூரணம் தயாரிக்கப்படுகிறது.
இதை எடுத்துக்கொள்வதால் புற்றுநோயை கட்டுப்படுத்தவதாகவும், புற்றுசெல்கள் வளரும் அபாயத்தையும் குறைக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும்.
மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். மேலும் சைனஸ் நோயைத் தீர்க்கும்.
ஒரு டம்ளர் நீரில், ஒரு ஸ்பூன் திரிபலா பவுடரை கலந்து, காய்ச்சி, ஆற வைத்துக் குடித்தால், தோலின் ஆரோக்கியத்தைக் காப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும் பண்புகள் இதில் உள்ளன. மேலும் அல்சரை கட்டுப்படுத்தும்.
மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.