ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் செம்பருத்தி டீ!

ரத்தத்தில் சோடியம் குறைவாக பொட்டாசியம், சத்து அதிகமாக இருந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் நான்கைந்து செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

வடிகட்டி இத்துடன் நாட்டுச் சர்க்கரை கலந்து தினமும் குடித்தால், இதில் இருக்கும் பீட்டா கரோட்டின், லைக்கோபின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

இதில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.

செம்பருத்தி டீயில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் , உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

செம்பருத்தி பூவில் குளிர்ச்சி தன்மை அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு ஊட்டச்சத்துகளை அளித்து, மேலும் ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.