அதிக நன்மைகளை அள்ளி தரும் அத்திப்பழம்!
அத்திப்பழத்தில், 13.6 சதவீதம் நீர்ச்சத்தும், 7.4 சதவீதம் புரதச் சத்தும், 5.6 சதவீதம் மாவுப் பொருளும், 17.9 சதவீதம் நார்ப் பொருளும், 6.5 சதவீதம் சாம்பல் சத்தும், 0.91 சதவீதம் பாஸ்பரிக் அமிலம் உள்ளன.
மேலும் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற பல்வேறு உலோகச் சத்துக்களும் உள்ளன.
பழத்தின் தோலை சீவி விட்டு உண்ணலாம். உலர் பழத்தை, தேனில் ஊற வைத்து சாப்பிடலாம் அல்லது உலர் பழத்தை பொடியாக்கி, சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம்.
அத்திப் பழத்தை அடிக்கடி உண்டு வர, இதயம் பலமாகும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை போக்குவதற்கும் இதய கோளாறுகளால் வரும் ஆபத்தை குறைக்கவும் உதவுகிறது.
ரத்தம் விருத்தியடையும். நோய் எதிர்ப்பு திறன் கூடும். இதைத் தவிர ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் இது அதிகம் குறைக்கிறது
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உணவு செரிமானம் ஆகும் நேரத்தை இது அதிகரிக்கிறது. அஜீரணத்தை குணப்படுத்தும்.
உலர் அத்தியை பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட, கல்லீரல் சீரடையும்
அத்தி விதைத் துாளை நீர் கலந்து சாப்பிட, நீரிழிவு நோய் குணமாகும். ஆனால் காய்ந்த அத்திப்பழங்களில் அதிக அளவு சர்க்கரை நிறைந்துள்ளதால் அவற்றை மிகச் சிறிதளவே உட்கொள்ள வேண்டும்.