கோகோ கொஞ்சம் கசப்பு... நிறைய சிறப்பு....

கோகோவில் மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், இரும்பு சத்துகள் இருப்பதால் துாக்கம், எலும்பு வலிமை மேம்படும்.

இதில் உள்ள பொட்டாசியம், நம் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

அதிகளவு பாலிபீனால் இருப்பதால் மாரடைப்பு வரும் சதவீதத்தை குறைத்து, இதய நலனை மேம்படுத்துகிறது என்று சமீப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், நம் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், நரம்பு பிரச்னை குறையும், அறிவாற்றல் மேம்படும்.

அதிக ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் புற்றுநோயை தடுக்கிறது; வயதான தோற்றத்தை குறைக்கிறது.

குறைந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவரும் எடுத்துக்கொள்ளலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும்.

நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கும்.