நவராத்திரி ஸ்பெஷல் : சிறுதானிய பால் பாயசம்!
சிறுதானியங்கள் அரிசி, கோதுமை போன்ற மாவுச்சத்து நிறைந்த தானியங்களைக் காட்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதில் நவராத்திரியை முன்னிட்டு ஒரு பால் பாயசம் செய்வோம்!!
தேவையான பொருட்கள்: சாமை, வரகு மற்றும் குதிரைவாலி - தலா ஒரு தேக்கரண்டி, பால் - நான்கு டம்ளர்,
வெல்லம் - அரை கப், முந்திரி, பாதாம், சுக்குத்துாள், ஏலக்காய் துாள் - சிறிதளவு.
செய்முறை: சாமை, வரகு மற்றும் குதிரைவாலியை, வெறும் வாணலியில் தனித்தனியே போட்டு, மணம் வரும் வரை வறுக்கவும்.
பின்னர், ஒன்றாகச் சேர்த்து, மூன்று டம்ளர் சூடான பால் ஊற்றி வேக வைக்கவும்.
அரை கப் அளவு வெல்லத்தை, தனியே தண்ணீர் ஊற்றி சூடாக்கிக் கரைத்து சேர்க்கவும்.
வேகும் போதே முந்திரி, பாதாமை சீவிப் போட்டு, சுக்குத் துாள், ஏலக்காய்த் துாள் சேர்க்கவும். கடைசியாக பால் சேர்க்கவும். விரும்பினால், சிறிதளவு குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்க்கலாம்.