பெண் கருவுறுதலின் போது சாப்பிட வேண்டிய உணவுகள்...!

ஆரோக்கியமான கருத்தரித்தலுக்கு போலிக் அமிலம் நிறைந்த கீரைகள், பீன்ஸ் மற்றும் தானியங்களை உட்கொள்வது அவசியமாகும்.

கருவுறுதலின் போது ஏற்படும் ரத்த சோகையை தடுக்க இரும்புச் சத்து நிறைந்த இறைச்சிகள், பீன்ஸ் மற்றும் கீரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஹார்மோன் ஒழுங்குமுறை மற்றும் கரு முட்டையின் தரம் உயர ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள கொழுப்பு நிறைந்த மீன், ஆளிவிதை, மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை உண்ணுங்கள்.

கரு முட்டைகளை சேதத்திலிருந்து பாதுகாக்க பெர்ரி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றைச் உணவில் சேர்க்கவும்.

கருவுறுதலின் போது, ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்க நாட்டுக்கோழி, பனீர் மற்றும் பீன்ஸ் போன்ற தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.

கால்சியம் சத்து குறைப்பாட்டை தடுக்க பால், கீரைகளை தினமும் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த ஜிங்க் சத்து நிறைந்த முழு தானியங்கள், பருப்புகள் மற்றும் பாதாம், பிஸ்தா உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க வைட்டமின்கள் சி மற்றும் ஈ நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

ரத்த சர்க்கரை மற்றும் ஹார்மோன் சமநிலைக்கு நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக நிரேற்றம் அவசியமாகும். ஆகையால், தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.