நினைவாற்றல் அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்...
வல்லாரையில் உள்ள ஆசியாடிகோசைட்ஸ், மூளைக்குச் சோர்வு தராமல், அறிவைத் துலங்க வைக்கும். துவையல், சூப் செய்து உண்ணலாம்.
மூளையின் செயல்ப்பாட்டை துரிதப்படுத்த ஒமேகா 3 தேவைப்படுகிறது. மீனை தவிர முந்திரி , ஆளிவிதை, பீன்ஸ், பூசணி விதைகள் போன்றவற்றிலும் ஒமேகா 3 கிடைக்கின்றது.
வயதானால் வரும் அல்சைமர் நோய் வராமல் காப்பதில் வால் நட் பெரும்பங்கு வகிக்கின்றது.
பசலைக்கீரையில் போலிக் அமிலம் நிறைய உள்ளது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் .
சர்க்கரை வள்ளிகிழங்கில் வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின் அதிகம் உள்ளதால் நினைவாற்றலை அதிகப்படுத்தும்.
உலர்ந்த திராட்சையில் இரும்பு சத்து, பிகாம்ப்லக்ஸ், போலிக் அமிலம், கால்சியம் மற்றும் மக்னீசம் அதிகமுள்ளதால் மூளைக்கு சிறந்த மருந்தாகும்.
முளைகட்டின கோதுமையில் வைட்டமின் ஈ, செலினியம் நிறைய உள்ளதால் மறதியை குறைக்க உதவும்.
ஆப்பிளில் உள்ள க்வார்சிடின் சத்து மறதியை தடுக்கும் சக்தியுடையது.
வெங்காயத்தில் க்வார்சிடின், அன்தோசையானின் அதிகமுள்ளதால், அது மூளைக்கு ஏற்ற உணவாகும்.