உங்கள் வயிற்று உஷ்ணத்தைத் தணிக்க ஏற்ற உணவுகள்..!

இளநீர், நுங்கு என ஏதாவதொன்றை வாரம் ஒருமுறை குடிகக் வேண்டும்.

தினமும் மதிய சாப்பாட்டில் மோர் கண்டிப்பாக இடம் பெறவேண்டும். பால் பொருட்கள் ஒவ்வாமை கொண்டவர்கள் மோருக்கு பதிலாக வெங்காயம் சாப்பிடலாம்.

வெள்ளரிக்காய், தர்பூசணி, திராட்சை உள்ளிட்டவற்றில் நீர்ச்சத்து அதிகம். இவற்றை சாப்பிடுவது நல்லது.

இரவு எண்ணெய் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்த்து ஆவியில் வேக வைத்த உணவு சாப்பிடுவது நல்லது. இரவு உறங்கும்போது செரிமானம் நடைபெறும். அப்போது உஷ்ணத்தைத் தடுக்க இது உதவும்.

காலை எழுந்ததும் சாதம் வடித்த கஞ்சியைக் குடிப்பது காலை வயிற்று உஷ்ணத்தைப் போக்க உதவும்.

வெறும் வயிற்றில் டீ, காஃபி உள்ளிட்ட கஃபைன் பானங்கள் அருந்துவது வயிற்று அமிலத்தை அதிகரிக்கும். எனவே காலை கிரீன் டீ குடிக்கலாம்.

வயிற்றுப்புண், கேஸ்ட்ரைட்டிஸ் ஏற்பட மதுப்பழக்கம் முக்கியக் காரணியாகும். தண்ணீர் கலக்காமல் நேரடியாக மது வயிற்றின் உள்ளே செல்லும்போது புண் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

உணவில் உப்பு, காரத்தின் அளவைக் கட்டுகுள் வைக்க வேண்டும். தயிர் வெங்காயத்தை மசாலா உணவுகளுடன் சேர்க்க வேண்டும். இவை வயிற்றில் ஏற்படும் எரிச்சலைத் தடுத்க உதவும்.