தீபாவளி பண்டிகை: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்!
தீபாவளியை முன்னிட்டு, இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழரசு எச்சரித்துள்ளது.
இனிப்பு , கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
தரமான மூலப்பொருட்களை கொண்டு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கலப்படமின்றி தயாரிக்க வேண்டும்.
கலப்பட பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்க கூடாது.
ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் பயன்படுத்த கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலம் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும்.
உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தால், உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் - 2006ன் படி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.