பழைய சோறு சாப்பிடலாமா?
முதல் நாள் சமைத்த அரிசி சோறில், மீதமுள்ளவற்றில் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். இதை மறுநாள் காலையில் பழைய சோறாக உண்ணப்படும்.
சமீபத்தில் வெளி வந்த ஒரு உணவு ஆய்வுக் கட்டுரையில், பழைய சோற்றை 'ஸ்ட்ராங் ஸ்டார்ச்' என்று குறிப்பிட்டுள்ளது.
புதிதாக சமைத்த அரிசி சோறில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை சேர்ந்த மாவு சத்து உள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.
அதன் காரணமாக, புதிதாக சமைத்த சோறை சாப்பிட்டதும், இச்சத்து வேகமாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
குறிப்பாக சர்க்கரை கோளாறு உள்ளவர்கள் சமைத்த அரிசி சோறு சாப்பிட்டால், ரத்த சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கும்.
அதே சோறு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறிய பின் அடுத்த நாள் காலையில் பார்த்தால், முந்தின நாள் இருந்த மாவுச் சத்து, உள்ளேயே கடினமாக்கி ஸ்ட்ராங்க் ஸ்டார்ச்சாக மாறிவிடும்.
இந்த கடின ஸ்டார்ச், ரத்தத்தில் உறிஞ்சப்படும் தன்மை, அதிலிருந்து சர்க்கரை வெளியேறுவது வெகுவாக குறைகிறது.