வயிற்றை சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் உணவுகள் இவை

தினமும் சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேயளவுக்கு உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதும் முக்கியம்.

குடல் கழிவுகளை வெளியேற்ற இயற்கையான உணவுகளையே நாம் மருந்தாகப் பயன்படுத்தலாம். இவை டீடாக்ஸ் உணவுகள் எனப்படுகின்றன.

இவை குடலிலுள்ள அசுத்தங்களை நீக்குவதுடன், செரிமானத்தையும் எளிதாக்க உதவுகிறது. எனவே, தினமும் நாம் சாப்பிடவேண்டிய டீடாக்ஸ் உணவுகள் குறித்துப் பார்ப்போம்.

எலுமிச்சை சாற்றை காலை எழுந்தவுடன் வெந்நீரில் கலந்து குடிப்பதால், இரவு சாப்பிட்ட உணவிலுள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அகற்றப்பட்டு மலம் எளிதாக வெளியேறும்.

இரவு மதுப்பழக்கம் காரணமாக காலையில் ஏற்படும் அஜீரண கோளாறு, வயிற்றில் வாயு சேர்தல் ஆகியவற்றைத் தடுக்க இஞ்சி உதவும்.

ரத்தத்தில் உள்ள கெட்ட டாக்ஸின்களை எதிர்த்துப் போராட பூண்டிலுள்ள அலிசின் ரசாயனம் உதவுகிறது. மேலும், ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்ய உதவும்.

மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி அடங்கிய பீட்ரூட், ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.

பழங்களில் வெற்று கலோரிகள் இல்லாததால் இவை ரத்தத்தை சுத்தம் செய்ய உகந்தது. இயற்கையான முறையில் வயிற்றை சுத்தம் செய்ய தினமும் ஏதாவதொரு பழத்தை சாப்பிடுவது நல்லது.

பிரவுன் நிற கவுனி அரிசி வெள்ளை அரசியை விட உடலுக்கு நல்லது. ரத்தத்திலுள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்தி உடலை புத்துணச்சியுடன் வைக்க இது உதவுகிறது.