புரோட்டின் சத்து நிறைந்த ஓட்ஸ் ஸ்மூத்தி... காலை பிரேக்பாஸ்ட்டுக்கு!
3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை சிறிதளவு தண்ணீரில் நனைத்து 12- 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் 1/4 கப் வறுத்த வேர்கடலை, தலா 1 டேபிள் ஸ்பூன் வீதம் ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள், ஒரு இன்ச் அளவுக்கு பட்டை சேர்க்கவும்.
தலா 1 பேரீச்சம் பழம் மற்றும் வாழைப்பழத்தை சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.
இந்த கலவையுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும்.
இப்போது புரோட்டின் சத்து நிறைந்த ஓட்ஸ் ஸ்மூத்தி ரெடி. இதில், சிறிது வேர்க்கடலை, பட்டை தூளை தூவி குடிக்கலாம்.
'பிஸி'யான காலை நேரத்தில் உணவு சாப்பிட நேரம் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்மூத்தி ஆரோக்கியமான சாய்ஸாகும். உடல் எடை குறைப்புக்கும் உதவும் இது.