காலை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 6 உணவுப்பொருட்கள் !
தினமும் காலை நேர உணவு உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதேவேளையில் எளிதாக செரிமானமாகக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டும்.
எனவே செரிமான மண்டலத்தை எளிதாக்கி, உடலுக்கு ஆற்றலை தரும் சில உணவுப்பொருட்களை பார்க்கலாம்...
பப்பாளியில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கள் மற்றும் வைட்டமின்கள் செரிமானம் துரிதப்படுத்தி, உடலிலுள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
ஆப்பிள்... நார்ச்சத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளதால், இரைப்பை, குடல் நலனுக்கு சிறந்தது. இதிலுள்ள பெக்டின் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. எனவே, அடிக்கடி ஜூஸாக குடிக்கலாம்.
வாழைப்பழங்களில் நார்ச்சத்து அதிகமுள்ளது; குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடக்க உதவுவதுடன், ஊட்டச்சத்து உறிஞ்கதலையும் ஊக்குவிக்கும். இதிலுள்ள நார்ச்சத்து உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.
புரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், குடல் இயக்கம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, இதயம், எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.