உடல் சூட்டை தணிக்க வேண்டுமா? இந்த பானங்களை ட்ரை பண்ணுங்க…
பாதாம் பிசின் பானம்: பாதாம் பிசினை இரவு முழுக்க ஊற வைத்து, தண்ணீரில் கலந்து, சில துளிகள் லெமன், தேன் கலந்து குடிக்கலாம். குழந்தைகளுக்கு இதன் ருசி ரொம்பவே பிடிக்கும்.
நெல்லி ஜூஸ்: பெரிய நெல்லி மற்றும் இஞ்சியை அரைத்து வடிகட்டி, லெமன் ஜூஸ் மற்றும் தேன் கலந்து குடித்தால், கல்லீரல் சுத்தமாகிவிடும். உடலும் குளிர்ச்சியாகும்.
துளசி விதை ஜூஸ்: நாட்டு மருந்து கடைகளில் துளசி விதை கிடைக்கும். அதை வாங்கி ஊறவைக்கவும். இதனுடன், துளசி இலை அரைத்தெடுத்த சாறு, கொஞ்சம் தேன் கலந்து குடிக்க, எதிர்ப்பு சக்தி எக்கச்சக்கமாக கிடைக்கும்.
ஜல்ஜீரா: இந்த பானம் சீரகம், இஞ்சி, கருப்பு மிளகு, புதினா மற்றும் உலர் மாம்பழ தூள் ஆகியவற்றை கலந்து செய்யப்பட்ட ஒரு காரமான கலவையாகும். ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. உடலையும் குளிர்ச்சியாக்கும்.
பெர்ரி ஜூஸ்: ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றின் ஜூஸ்களைக் குடித்து வந்தால், கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
சோல் கடி: சோல் கடி என்பது கோகம் அல்லது ஆம்சோல் மற்றும் தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பானமாகும். கோகம் சாற்றில் தேங்காய் பால், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் உப்பு கலந்து கொத்தமல்லி சேர்த்து, குளிர்விக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.