ஹெல்த்தியான ராகி, நாவல் பழம் குழி பணியாரம்
தேவையான பொருட்கள்: ராகி மாவு -1 கப், நாட்டு சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப்
நாவல் பழம் - 10, ஏலக்காய் பொடி மற்றும் நெய் - தேவையான அளவு.
நாவல்பழத்தில் விதைகளை நீக்கி, ஏலக்காய் பொடி கலந்து அரைக்கவும்.
அதில், ராகி மாவு, பால், நாட்டு சர்க்கரையை கலக்கவும்.
பணியாரக்கல் சூடானவுடன் சிறிது நெய் தடவி, தேவையானளவு மாவை ஊற்றி வேக வைக்கவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுத்தால் இப்போது ராகி, நாவல் பழம் குழி பணியாரம் ரெடி.
சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த பணியாரத்தை அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.