ஆரோக்கியம் தரும் பருத்திப்பால் ரெசிபி
தேவையான பொருட்கள்: பருத்தி விதை - 1 டம்ளர், பச்சரிசி - 50 கிராம், வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் துாள், மிளகுதுாள், சுக்குதுாள், துருவிய தேங்காய் - சிறிதளவு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.
பருத்தி விதை, பச்சரிசியை சுத்தம் செய்து தனித்தனியே, 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் நன்றாக அரைத்து வடிகட்டி கொதிக்க விடவும்.
நன்றாக வெந்தவுடன் அதில் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்துாள், மிளகுதுாள், சுக்குதுாள் சேர்த்து இறக்கவும்.
இப்போது ஆரோக்கியம் தரும், பருத்திப்பால் ரெடி. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.