உடல் வளர்ச்சிக்கு உகந்த ஜிங்க்! உணவுகளிலேயே கொட்டி கிடக்கு!
ஜிங்க் என அழைக்கப்படும் துத்தநாகம் உடலின் வளர்ச்சி, இயக்கங்களுக்கு தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று. மேலும் தோல் ஆரோக்கியம், புண்களை ஆற்றுதல், அலர்ஜியை நீக்குதல் என சரும பிரச்னைகளுக்கு உதவும்.
தினமும் பெண்களுக்கு 8 மி.கி, கர்ப்பிணிகள், ஆண்களுக்கு 11 மிகி, பாலூட்டும் தாய்மார்களுக்கு 12 மிகி ஜிங்க் தேவை. உணவுகள் மூலமே இவற்றை அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம் என அறிந்துக்கொள்வோம்.
ஒரு கப் வேக வைத்த கொண்டைக்கடலையில் 2.5 மி.கி துத்தநாகம் உள்ளது. மேலும் இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகளும் அடங்கி உள்ளன.
பால் மற்றும் தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களில் கால்சியம் மட்டுமல்ல ஜிங்க்கும் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுவூட்ட உதவும்.
ஒரு கப் பூசணி விதையில் 2.2 மி.கி அளவு ஜிங்க் உள்ளது. இதன் குறைபாடு இருப்பவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு பூசணி விதைகள் உண்ணலாம். மேலும் இது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கும்.
சில தர்பூசணி விதைகளில் 4 மி.கி வரை ஜிங்க் உள்ளது. அவற்றை உலர்த்தி தினசரி வறுத்து ஸ்னாக்ஸாக சாப்பிடலாம். இதை உண்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
100 கிராம் டார்க் சாக்லேட்டில் 3.3 மி.கி ஜிங்க் உள்ளது. அதனால் குழந்தைகளுக்கு இனிப்பு இல்லாத டார்க் சாக்லேட்களை தாராளமாக வாங்கி கொடுக்கலாம்.
மேலும் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, ப்ரக்கோலி, காளான் மற்றும் பூண்டு போன்றவற்றில் கணிசமான அளவில் ஜிங்க் உள்ளது.