ருசியான சேப்பங்கிழங்கு கட்லெட்!
சுவை மிகுந்த சேப்பங்கிழங்கில் கட்லெட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முதலில் 1/4 கிலோ சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து எடுத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சேப்பங்கிழங்கை போட்டு நன்றாக மசிக்கவும்.
இதில் 2 டே.ஸ்பூன் கடலை மாவு,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், நறுக்கிய 2 வெங்காயம் , சிறிதளவு பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு சேர்த்து பிசையவும்.
இப்போது பிசைந்த மாவை வட்டமாக கட்லெட் வடிவில் தட்டி, பிரெட் தூளில் பிரட்டி எடுக்க வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி, இதை பொரித்து எடுத்தால் சுவையான சேப்பங்கிழங்கு கட்லெட் தயார்.