மலச்சிக்கலை சீராக்கும் உணவுகள் சில

செரிமானம் முதல் மலச்சிக்கலை நீக்குவது வரை இஞ்சி முக்கியப்பங்கு வகிக்கிறது. இது கீழ் குடலிலுள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது. மலச்சிக்கலின் போது குடல் இயக்கத்துக்கு உதவும்.

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்தி, உடலிலிருந்து நச்சுகளை அகற்றச் செய்யும்.

மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளதால், தினமும் ஊற வைத்த 3 அத்திப்பழங்களை சாப்பிட மலச்சிக்கல் விலகும்.

தினமும் இரவில் 5 - 6 கருப்பு திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் சாப்பிட குடல் இயக்கம் சீராகும்.

ஆரோக்கியமான குடலுக்கு, சிறு சோளம் போன்ற சிறுதானியங்களை தினசரி உணவில் சேர்க்கலாம். குறிப்பாக, குடல் ஆரோக்கியத்திற்கு இது ஆயுர்வேத டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

அதேப்போல், கிவி பழம், கேழ்வரகு ஆகியவற்றை உட்கொள்வது, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.