ஆரோக்கிய பயன்கள் நிறைந்த சோம்பு

செரிமான சக்தியைத் துாண்டுவதில் சோம்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. அசைவ உணவைச் சாப்பிட்ட பின், இதை வாயில் போட்டு மென்றால் எளிதில் செரிமானமாகும்.

அசைவம் மட்டுமின்றி சைவம் சாப்பிட்ட பின்பும் சோம்பை மென்றால், செரிமான சக்தி அதிகரிப்பதுடன், வாய் துர்நாற்றம் நீங்கும். பற்களில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும்.

உணவில் சோம்பைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்கள் நம் உடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

தினமும், காலையில் 1/2 டீஸ்பூன் சோம்பை மென்று சாப்பிட்டு வர கல்லீரல் வலுவடையும்; நச்சுக்கள் நீங்கி துாய்மையாகும். கல்லீரல் புற்றுநோய் பாதிப்பையும் தவிர்க்க உதவும்.

ரத்தக்குழாய்களில் அழற்சி, அடைப்பு ஏற்படாமல் இது பாதுகாக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலப்பிரச்னையை தீர்க்கிறது.

திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை சோம்பில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கருப்பைச் சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், மந்தம், இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்குச் சோம்பு தீர்வு தரும் எனச் சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.